அடுத்த மாதம் 3-ம் தேதி மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம்

அடுத்த மாதம் 3-ம் தேதி மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம்
Updated on
1 min read

உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் பற்றி விவாதிப்பதற்காக, வரும் ஜூலை 3-ம் தேதி மாநில உள் துறை அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜம்மு காஷ்மீர் நிலவரம், எல்லை தாண்டிய தீவிரவாதம், மாவோயிஸ்ட் வன்முறை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்தியில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

முந்தைய ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் மாநில முதல்வர் கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in