13 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

13 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை
Updated on
1 min read

கடந்த 2012-ல் குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரு, தும்கூர், மங்களூரு, ஹைதராபாத், மும்பை, லக்னோ ஆகிய 6 நகரங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களை கொல்வதற்காக சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் இ தொய்பா, ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 13 தீவிரவாதிகள் கைதாகினர்.

இது தொடர்பான வழக்கு பெங்க ளூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று சிறப்பு நீதிபதி சி.முரளிதர் பாய் தீவிரவாதிகள் 13 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.31,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in