

சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் பிறந்தநாளை உ.பி. அரசு வெகு விமரிசையாக கொண்டாடுகிறது. இதனை ஒட்டி, பல்வேறு நலத்திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார் அம்மாநில முதல்வரரும், முலாயம்சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ்.
முலாயம்சிங் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அம்மாநில செய்தித்தாள்கள் பலவற்றில் முழுப்பக்கத்திற்கு கட்சி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விளம்பரங்கள் முலாயமை நாட்டின் அடுத்து பிரதமராக முன்னிலைப் படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் முலாயம் பிறந்தநாள் இவ்வளவு விமரிசையாக கொண்டாடப் பட்டதில்லை என்கிறது உ.பி. அரசியல் வட்டாரம்.
3-வது அணிக்கே வாய்ப்பு:
பா.ஜ.க. சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் இருவர் மீதும் மக்கள் கடும் அதிருபதியில் உள்ளனர். அவர்களுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு நிச்சமயாக தனிப்பெரும் பான்மை கிடைக்காது. இதனால் 3–வது அணியே ஆட்சி அமைக்கும்.
மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிப்பதில் உத்தரபிரதேசம் தான் மிகப் பெரிய மாநிலமாகும். எனவே அடுத்த ஆட்சி அமைப்பதில் உத்தரபிரதேசமே முக்கிய பங்கு வகிக்கும்.
பிரதமர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறேன். என்னை வலுவான முலாயம்சிங் ஆக நீங்கள் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என நேற்று பெரேலியில் நேற்று நடைபெற்ற சமாஜவாதிக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.