

சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாகவே திருநங்கைகள் நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் சேரக் கூட சரியான வாய்ப்பு தருவதில்லை என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தேசிய சட்ட உதவி ஆணையம் தாக்கல் செய்திருந்த மனு மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மேற் சொன்ன கருத்தை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. அவர்களுக்காக செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.
ஆண், பெண் என்கிற பாலினப்பிரிவுகளில் வருபவர்க ளுக்கு கிடைப்பது போல திருநங்கை களுக்கும் சம பாதுகாப்பு, உரிமை கள் கிடைக்க அவர்களை 3வது பாலினம் என்கிற பிரிவின் கீழ் வரும் குடிமக்களாக அறிவிக்க வேண்டும் என தேசிய சட்ட உதவி ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரி விக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராஜு ராமசந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
திருநங்கைகளுக்கு நீதித்துறை, அரசமைப்புச்சட்ட அங்கீகாரம் கிடைத்தால் அவர்களுக்கு தேவை யானவற்றை பெற்றுத்தர அரசு ஆவன செய்ய முடியும். அரசு தரப்பிலும் இதற்காக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற் சொன்ன அங்கீகாரம் கிடைத்தால் இந்த பணிக் குழுவின் கரம் வலுப்பெற்று அடுத்த நட வடிக்கைக்குச் செல்ல வழி கிடைக்கும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாக பாலியல் பண்புகள் உள்ளன. பாலியல் அடிப்படையில் திருநங்கைகளை பாரபட்சப்படுத்தி பார்க்கக் கூடாது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 15ன் உட்பிரிவு 4-ல் விவாதிக்கப்படும் சமூக, கல்வியில் பின்தங்கிய குடிமகன்கள் என்று விவரிக்கப்படுவர்களின் கீழ் இவர்களையும் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக மண்டல் குழு பரிந்துரையையும் குறிப்பிட விரும்புகிறேன். அதன்படி இட ஒதுக்கீட்டுச் சலுகை கள் திருநங்கைகளுக்கும் நீட்டிக் கப்படவேண்டும் என்றார் ராமச்சந்தி ரன். முன்னதாக இந்த மனு மீது தங்கள் நிலை என்னவென்பதை தெரிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை, மகளிர், குழந்தை கள் மேம்பாடு, நகர, ஊரக மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகிய வற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு, தனியார் துறை வேலைவாய்ப்புகளில் திருநங்கை களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும். அவர்களின் அடிப்படை உரிமை கள் மறுக்கப்படுகின்றன. சமூக, கலாசார நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். சொந்த குடும்பமும் சமூகமும் அவர்களை சமமாக பார்ப்பதில்லை.
எல்லா குடிமக்களுக்கும் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டி யிடவும் உரிமை உள்ளது என்று சொல்லப்பட்டாலும் வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்கிற இரு பிரிவினரே இடம் பெறுகின்றனர். வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ திருநங்கைகளுக்கு உரிமை இல்லை இது நியாயமற்றது என மனுவில் குறி்ப்பிடப்பட்டுள்ளது.