மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 154 இடங்கள் - கருத்துக்கணிப்பில் தகவல்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 154 இடங்கள் - கருத்துக்கணிப்பில் தகவல்
Updated on
1 min read

வரும் 15ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து தேர் தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளி யாகி இருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பு கூடுதல் விறு விறுப்பை ஏற்றியிருக்கிறது.

பிரபல 'தி வீக்' பத்திரிகை மற்றும் 'ஹன்சா ரிசர்ச்' ஆகி யவை இணைந்து நடத்திய கருத் துக்கணிப்பு முடிவில், 288 தொகுதி கள் கொண்ட மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு 154 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. சிவசேனா கட்சிக்கு 47 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், தேசியவாத காங் கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிக்கு 10 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 15 தொகுதி களும் மற்றும் சுயேட்சை வேட் பாளர்களுக்கு 20 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சதவீதங்களின்படி, பா.ஜ.க. 36.50 சதவீதமும், சிவசேனா 17.10 சதவீதமும், காங்கிரஸ் 11.97 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் 5.85 சதவீதமும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 5.11 சதவீதமும் பெற வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் முதல்வர் பதவிக்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குத்தான் பெரும் பாண்மையான மக்களின் ஆதரவு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரித்விராஜ் சவாண் உள்ளார்.

அதற்கடுத்த இடங்களில் மகா ராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் ராஜ் தாக்கரேவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஐந்தாவதாகத் தான் இடம் பிடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in