

இலங்கைக்கான புதிய துணைத் தூதரகம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை யில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்யும் வகையில் திருவனந் தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும்.
இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்தார்.
திருவனந்தபுரத்தில் இப்போது ரஷ்யா மற்றும் மாலத்தீவு களுக்கான துணைத் தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இதனுடன் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகங்களும் சேர்வதால் அண்டை நாடுகளுடனான உறவு மேலும் வலுவடையும்.