

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவசங்கர் (89). ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சராகவும், கேரளா, சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த 2008-ல் நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் சேர்ந்த இவர், பின்னர் அக்கட்சி கலைக்கப்பட்ட தும் மீண்டும் காங்கிரஸில் இணைந் தார். முதுமை காரணமாக நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இவரது மறைவுக்கு ஆளுநர் நரசிம்மன், முதல்வர்கள் கே. சந்திர சேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகி யோர் இரங்கல் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.