

மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர பிரி வினையின்போது, ஆந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி, நடப்பு 2016-17 நிதியாண்டில் ஆந்திராவுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.1,976.5 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப் பட்டுள்ளது.
சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா வில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் ஆந்திர எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி யதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் சிறப்பு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறப்பு அந்தஸ்து பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.