Last Updated : 14 Oct, 2014 01:00 PM

 

Published : 14 Oct 2014 01:00 PM
Last Updated : 14 Oct 2014 01:00 PM

பதவிப் பசியில் பாஜக; காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு: சிவசேனா

பாஜக பதவிப் பசியில் அலைவதாகவும், காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் செத்த பாம்பாக உள்ளதாகவும் சிவசேனா விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவின் 288 சட்டப் பேரவை தொகுதிகளுக்கன தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பாஜக, சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இந்த நிலையில், சிவசேனா கட்சிகளை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், "சினசேனாவுக்கு எதிரி யாரும் இல்லை என்பதை போல் பாஜக பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவுக்கு சிவசேனாவின் எதிரி யார் என்பது நன்றாக தெரியும்.

பாஜக பல்வேறு மாநிலங்களில்ருந்து தனது கட்சி எம்.பி.க்களை கொண்டு வந்து இங்கு குவித்துள்ளது. சிவசேனாவுக்கு எதிராக நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் எங்களை வீழ்த்த போராடுகின்றனர். இதனை நிறைவேற்ற சாதிய மற்றும் மதவாதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

நேற்று வரை சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன் லால் ஆகியோர் இங்கு வாக்கு வங்கி அரசியல் நடத்த முயன்றனர்.

தற்போது குஜராத்தில் இருந்து ஒரு தலைவர் வந்துள்ளார். அவர் குஜராத் மக்களின் மூளையை குழப்பியது போல இங்கு இருக்கும் குஜராத்திகளின் மனங்களை மாற்ற நினைக்கின்றார்.

ஆனால், இங்கு உள்ள குஜராத்திகள் மறைந்த தலைவர் பால் தாக்கரே மீது தீராத அன்புடையவர்கள். அவர்கள் மனதை மாற்ற முடியாது என்பதில் உறுதியாக இருக்கலாம்.

மறுபக்கம் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் இருவரும் செத்த பாம்பு போலதான் உள்ளனர்" என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x