

தமிழகம், ஆந்திரா உட்பட தென் மாநில கடலோர பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவது அண்மை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் அதிக அளவில் பாதிப்படையும் என்பதும் கண்டறியபட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை யில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசியதாவது:
இந்திய கடலோர பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புவி அறிவியல் அமைச்சகம் வருடாந்திர அடிப்படையில் கண் காணித்து வருகிறது. நிலத்தை நோக்கி கடல் நகர்வது (கடல் அரிப்பு), கடலை நோக்கி நிலம் நகர்வது (நில வளர்ச்சி) மற்றும் நிலையான தன்மை என பல்வேறு பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வரு கிறது. இதன்மூலம் தென் மாநில கடலோரங்களில் மாற்றங் கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கலாம்.
கடலோர மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வது ஆகியவை வெகு நிதானமாகவே நடந்து வருகிறது. கடல் அரிப்பு தொடர் பாக தேசிய கடலோர மேலாண்மை மையம் தயாரித்த வரைபடத் தின் அடிப்படையில் கண்காணிக் கப்பட்டதில் கர்நாடக மாநிலம் உல்லால் பகுதியில் உள்ள காட்டே புரா கிராமம் தான் அதிக அளவில் பாதிப்பைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் தாழ்வான பகுதிகளில் அமைந் துள்ள சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, மச்சிலிப்பட்டினம், நிசாம்பட்டினம், காக்கிநாடா, பாராதீப், கொச்சி, மும்பை ஆகிய நகரங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக பருவ மாற்றத்தால், ஏற்படும் இத்தகைய இயற்கை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளன. மாநில அரசுகள், கடலோர பாதுகாப்பு மற்றும் மேம் பாட்டு ஆலோசனை குழுவுடன் இணைந்து தேவையான பாது காப்பு ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.