

பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பிரத்யேக 'பிங்க் ஹொய்சாலா' ரோந்து வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய திட்டத்துக்கு மகளிர் அமைப்பினர், சமூக நல அமைப்புகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நகரமாக விளங்கும் பெங்களூருவில் அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு பெண்களுக்கு பாதுகாப்பான நகரமா? என சர்வதேச ஊடகங்களும் கேள்வி எழுப்பின.
இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக் கவும், உரிய பாதுகாப்பு வழங் கவும் கர்நாடக அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடி வெடுத்தது. இதன்படி, பெங்களூரு வில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகை யில் 'பிங்க் ஹொய்சாலா' (இளஞ்சிவப்பு ஹொய்சாலா மன் னன்) என்ற ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் விதான சவுதா வளாகத்தில் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா 51 பிங்க் ஹொய்சாலா ரோந்து வாகனங் களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, சித்தராமையா பேசியதாவது:
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல் வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ள பெங்களூரு, சர்வ தேச நகரமாக கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் களும், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு பாதுகாப்பு டன் வாழ்கின்றனர்.
பெங்களூருவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல் லைகளை தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பிங்க் ஹொய்சாலா திட்டத்தின்படி பள்ளி, கல்லூரி, கோயில், வணிக வளாகம், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் 51 வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் பிரத்யேக பயிற்சி பெற்ற 3 பெண் போலீஸார் இருப்பார்கள்.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தொலைபேசி மூல மாகவும், 'சுரக்ஷா'' என்ற செல்போன் அப்ளிகேஷன் மூலமாகவும் புகா ராக தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார் களையும் கேட்டு, உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தப்படும். இந்த வாகனத் தில் போதிய பாதுகாப்பு கருவி களும், முதலுதவி பொருட்களும், ஜிபிஆர்எஸ், கேமரா உள்ளிட்ட கருவிகளும் பொருத்தப்பட்டுள் ளது. பெங்களூருவில் ஏற்கனவே 221 ஹொய்சாலா வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது 51 பிங்க் ஹொய்சாலா வாகனங்களும் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த புதிய திட்டத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்பினரும், சமூக நல அமைப் பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு இந்த திட்டத்தால் பாதுகாப்பு கிடைக்கும் என பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதே போல, சமூக வலைத்தளங்களில் பிங்க் ஹொய்சாலா திட்டத்தை வரவேற்று கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.