

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பரவலாக பெய்து வந்த கனமழை யால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கூறியதாவது:
போபால் உள்ளிட்ட சில இடங் களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை இல்லை. சில இடங்களில் மட்டும் லேசான தூறல் இருந்தது. ரேவா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மழை குறைந்து வெள்ளம் வடிந்து வருவதால் வெள்ளப்பெருக்கு அபாயங்கள் குறைந்துள்ளன.
எனினும், பல இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கியிருப்ப தால், போபால்-பரேலி சாலை, ரெய்சன்-விதிஷா சாலை மூடப் பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் மழை யினால் பலியானோரின் எண் ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
போபால், இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மண்டலங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இப்பகுதிகளில் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு, எந்த சூழலையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். மாநில பேரிடர் நிவாரணக் குழுவினரும், ராணுவ மும் மீட்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டனர். மழை சேதம் விரைவில் கணக்கிடப்பட்டு, குறிப் பாக ஏழைகளுக்கு முதலில் இழப் பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித் தார்.