

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்த முறைகேடுகளே பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுபற்றி நிருபர்களிடம் நேற்று கேஜ்ரிவால் கூறியதாவது:
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய் யப்பட்டுள்ளதாக கருதுகிறேன். ஆம் ஆத்மிக்கு கிடைத்திருக்க வேண்டிய சுமார் 25 சதவீத வாக்குகள் இந்த மோசடியால் சிரோன்மணி அகாலி தளம்-பாஜக கூட்டணிக்கு விழுந்திருக்கும் என சந்தேகிக்கிறேன்.
வாக்குப் பதிவு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குரியதாகி விட்டது. தேர்தலுக்கு முன் முடிவு எப்படி இருக்கும் என்று கணித்த வல்லுநர்கள் ஆம் ஆத்மி அலை வீசுவதாகவே கூறிவந்தனர்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக சந்தேகிக்கிறேன். இருப்பினும் இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்