Published : 06 Aug 2016 11:06 AM
Last Updated : 06 Aug 2016 11:06 AM

பெங்களூருவில் இன்று கவிதை திருவிழா

பெங்களூருவில் இயங்கி வரும் கலை இலக்கிய‌ அமைப்பான ‘அட்டா கலாட்டா’ முதல்முறை யாக 'பெங்களூரு கவிதைத் திருவிழா' நடத்துகிறது. அங்குள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் திருவிழா தொடங்குகிறது. முதல் நாள் நிகழ்ச்சிகள் சென்னையைச் சேர்ந்த பிந்துமாலினி நாராயண சுவாமியின் இசை கச்சேரியுடன் தொடங்குகிறது.

இது குறித்து ‘அட்டா கலாட்டா’ நிறுவனர்களில் ஒருவரான லக்ஷ்மி சங்கர், ‘தி இந்து'விடம் கூறும் போது,‘‘கவிதை மொழியை அழகூட்டி, செம்மை ஆக்குகிறது. எனவே கவிதையை நேசிக்கும் நண்பர்கள் ஷினி ஆன்டனி, சங்கர் உள்ளிட்டோருடன் சேர்ந்து புதுமுயற்சியாக இந்த திருவிழாவை தொடங்குகிறோம்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மைதிலி உள்ளிட்ட பன்மொழி பேசும் 67 கவிஞர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதனால் வெவ் வேறு மொழிகளில் கவிதை இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள், வடிவங்கள், பாடு பொருட்களை எளிதாக புரிந்து கொள்ளலாம். தவிர பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்கவுள்ளனர்’’ என்றார்.

நாளை வரை நடைபெறும் இந்த கவிதைத் திருவிழாவில் கவிதை வாசிப்பு, மதிப்பீடு, இசை, விமர் சனம் என பல்வேறு பகுதிகளாக நிகழ்ச்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட புகைப்பட கலைஞர் செல்வபிரகாஷ் லக்ஷ்மனின் ‘நீரில் கரையும் துயர வாழ்க்கை’ என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெறுகிறது. தமிழக மீனவர்களின் துயர வாழ்க்கையை பிரதிபலிக்கும் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

‘கவிதையும் உடல் மொழி அரசியலும்’ என்ற தலைப்பில் பிரபல தமிழ் கவிஞர் குட்டி ரேவதி உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகைகள் கமாலினி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், பாஜக நிர்வாகி வருண் காந்தி ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன.

இதேபோல நாளை ஆண்டாள் பாடல்கள் குறித்த அமர் வும், எழுத்தாளர் சச்சிதானந்தன் பங்கேற்கும் திறனாய்வு கூட்டமும் நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x