

உத்தரபிரதேச தேர்தலில் வெற்றிப் பெற்ற 403 எம்எல்ஏக்களில், 322 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் 143 பேர் மீது கொலை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேர்தலின்போது வேட்புமனு வுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப் பிட்டுள்ள தகவல்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு சரிபார்த்து வருகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி பாஜக சார்பில் கொலோனெல்கன்ஞ் தொகுதியில் போட்டியிட்ட அஜெய் பிரதாப் சிங்குக்கு ரூ.49 கோடி மதிப் புள்ள சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 143 எம்எல்ஏக்களில், 107 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பயங்கர குற்றங்கள் பதிவாகியுள்ளன.
கிரிமினல் வேட்பாளர்களில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாபியா கும்பல் தலை வர் முக்தார் அன்சாரி முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 5 கொலை வழக்கு உட்பட 16 கிரிமினல் வழக்குகள் உள்ளன.