

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நடிகை விஜயசாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலை தமிழக மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்த நிலை விரைவில் சீராகும் என கருதுகிறேன். ஆனால் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதில் சசிகலாவுக்குதான் எனது ஆதரவு” என்றார்.
இவரது இந்தக் கருத் துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.