

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கும் முடிவு பெரும் பாலும் மத்திய அரசின் அறிவுரையைச் சார்ந்திருக்கும் என்று முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அசாதாரண சூழ் நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் ஆளுநர் (வித்யாசாகர் ராவ்) எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். சசிகலாவுக்கு பெரும் பான்மை இருப்பதாக கூறி ஆட்சி யமைக்க உரிமை கோரியுள்ளார். அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு இல்லை.
ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பது நமக்கு தெரியாது. எனினும் அவர் எடுக்கும் முடிவு பெரும்பாலும் மத்திய அரசின் அறிவுரையைச் சார்ந்திருக்கும். இவ்வாறு ரோசய்யா தெரிவித்தார்.