காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் உயிரிழப்பு
Updated on
1 min read

காஷ்மீரின் குப்வாராவில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு ஞாயிறுக்கிழமை முதல் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை திடீரென தீவிரவாதிகள் பதுங்கி இருந்து ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு ராணுவ தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சண்டை நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in