காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த 2-3 மாதங்கள் மிக முக்கியமானது: முதல்வர் மெஹ்பூபா முப்தி

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த 2-3 மாதங்கள்  மிக முக்கியமானது: முதல்வர் மெஹ்பூபா முப்தி
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் நிலமைகளில் இன்னும் 2-3 மாதங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறிய மெஹ்பூபா முப்தி, அதன் பிறகு பேச்சு வார்த்தைகளைத் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.

யாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுச் சொல்லாத மெஹ்பூபா முப்தி, முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்த போது காஷ்மீரில் வாஜ்பாய் கொள்கை பற்றி எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த மெஹ்பூபா கூறும்போது, “அடுத்த 2-3 மாதங்கள் எங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதுகிறேன். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் நிலவரங்கள் மாறியுள்ளதாக நீங்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். முதலில் இயல்பு நிலையை மீட்போம், பிறகு பேச்சு வார்த்தைகளை தொடங்கலாம்

பேச்சு வார்த்தைகளை மத்திய அரசின் உயர்மட்ட குழுவினர் தொடங்க வேண்டும்” என்றார்.

ராஜ்நாத் சிங்கிடம் காஷ்மீரில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி விவரித்தார். அதாவது பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடும் அவர்கள் மீது கல்லெறி சம்பவங்களும் நின்றபாடில்லை என்பதை ராஜ்நாத் சிங்கிற்கு அவர் எடுத்துரைத்தார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி கூறிய மெஹ்பூபா, மத்திய அரசுதான் இதுபற்றி கருத்து கூற முடியும் என்றார்.

ராஜ்நாத் சிங்கும், மெஹ்பூபா முப்தியும் தொடர்ச்சியான மாணவர்கள் எழுச்சியும், போலீஸ் நடவடிக்கையையும் விவாதித்து அமைதி திரும்புவதற்கான வழிமுறைகளை விவாதித்தனர்.

மேலும் ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் காஷ்மீரிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முப்தி கோரிக்கையை ராஜ்நாத் சிங்கிடம் முன்வைத்தார்.

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, காஷ்மீரிகளுக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது குறித்த உள்துறை அமைச்சக அறிவிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நிதி ஆயோக் கூட்டத்தில் மெஹ்பூபா கேட்டுக் கொண்ட போது, மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் வாழும் காஷ்மீரி மாணவர்களை ‘தங்கள் குழந்தைகள் போல்’ நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in