Published : 10 Mar 2017 10:16 am

Updated : 16 Jun 2017 13:43 pm

 

Published : 10 Mar 2017 10:16 AM
Last Updated : 16 Jun 2017 01:43 PM

தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்

தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கச்சத்தீவு அருகே, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரியிருந்தார். மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத் தின்போது அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “பரஸ்பரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என இந்தியா, இலங்கை இடையே உடன்பாடு உள்ளது. இதை மீறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்றார்.

மற்றொரு அதிமுக உறுப்பினர் வி.எழுமலை பேசும்போது, “இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி நடந்துகொள்கின்றனர். கடந்த வாரத்தில்கூட 50-க்கும் மேற்பட்டோரை அவர்கள் கைது செய்துள்ளனர். எனவே, இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசும்போது, “எங்கள் மாநில (கேரள) மீனவர்களைக் கூட பாகிஸ்தான் கைது செய்துள்ளது. மேலும் பிரிட்டிஷ் டியாகோ கார்சியா அருகே மீன் பிடிக்கும் மீனவர்களை வெளிநாட்டு பாதுகாப்புப் படையி னர் அச்சுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலை யிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.


தமிழக மீனவர்சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்இலங்கை கடற்படையினர்நாடாளுமன்றம்அதிமுக உறுப்பினர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x