தமிழர்களின் உடைமைகளை கொள்ளையடித்த கன்னட அமைப்பினர்

தமிழர்களின் உடைமைகளை கொள்ளையடித்த கன்னட அமைப்பினர்
Updated on
2 min read

பெங்களூருவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களின்போது கன்னட அமைப்பினர் அங்குள்ள‌ தமிழர்களின் உடமைக‌ளை திட்ட மிட்டு கொள்ளையடித்ததும் மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங் களில் பெரும் வன்முறை வெடித் தது. 200-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. தமிழர்களின் கடைகளும் அலுவலகங்களும் தொழில் நிறு வனங்களும் வீடுகளும் தாக்கப் பட்டன. கன்னட அமைப்பினரும் சில சமூக விரோதிகளும் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய தாக தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் கர்நாடக போலீ ஸார் காவிரி வன்முறை தொடர்பான புகைப்படம், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை அனுப்புமாறு பாதிக் கப்பட்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் கோரிக்கை வைத்த னர். அச்சு மற்றும் காட்சி ஊடகங் களிடம் இருந்து வன்முறை தொடர் பான ஆதாரங்களை சேக‌ரித்தனர். இதுமட்டுமில்லாமல் பொது இடங் களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டன.

கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடியோ பதிவு களும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களும் கிடைத்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களும் தமிழ் அமைப்பினரும் போலீஸாரிடம் பல்வேறு புகார்களை அளித்துள் ளனர். இந்த ஆதாரங்கள் வன்முறை வழக்குகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகள்

போலீஸார் திரட்டியுள்ள வீடியோ பதிவுகள் சில க‌ன்னட ஊடகங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் கும்பலாக செல்லும் கன்னட அமைப்பினரின் கைகளில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டு உள் ளிட்ட பயங்கர ஆயுதங்கள் உள்ளன. இந்தக் காட்சிகளில் உள்ள பெரும் பாலோர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த ரவுடிகள் பலர் கன்னட அமைப்புகளின் நிர்வாகியாக இருப் பதால் காவிரி விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி யுள்ளனர். பெங்களூருவில் உள்ள ஆட்டோ விற்பனையகத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல், வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டு கொளுத்தினர். அதன் உரிமையாளரிடம் மேலும் தாக்க மல் இருக்க ரூ. 2 லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனால் அஞ்சிய உரிமையாளர் பணம் கொடுத்த பிறகு மற்ற பொருட்களை தாக்கா மல் திரும்பியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது அவர்கள் ரவுடிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள், உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட் டோவை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அவரிடம் கடையை எரிக் காமல் இருக்க பணம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.

கிரி நகரில் உள்ள ஏ.வி.மசாலா ஃபுட்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தீ வைத்து கொளுத்தினர். அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மூட்டைகளை தூக்கிச் சென்றுள்ளனர். இது தொடர் பாக‌ மசாலா நிறுவனத்தினர் கூறிய போது, ''கடந்த விநாயகர் சதுர்த் திக்கு கன்னட அமைப்பினர் எங்களிடம் ரூ. 1 லட்சம் நன்கொடை கேட்டனர். அதை தர மறுத்ததால் தற்போது தாக்குதல் நடத்தி நிறுவன பொருட்களை லட்சக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்'' என்றனர்.

பெங்களூருவில் உள்ள அடை யார் ஆனந்தபவன், மதுரை இட்லி கடை உள்ளிட்ட தமிழக நிறுவனங்களை தாக்கிய கன்னட அமைப்பினர் அங்கிருந்த பொருட் களையும் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர். பூர்விகா மொபைல்ஸ் கடையை தாக்கி செல்போன்களை அள்ளிச் சென்றுள்ளனர். இதுமட்டு மில்லாமல் ஆங்காங்கே தமிழர் களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தி பல லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மிரட்டி பறித்துள்ளனர் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சுப்ரமணிய பாளையாவில் உள்ள திருமுருகன் வீட்டுக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் அவரது வீட்டை தாக்கினர். கண்ணாடி பொருட்களை உடைத்து வெள்ளிப் பொருட்கள், டிவி, குளிர்சாதனப்பெட்டி, மின் விசிறி உட்பட ரூ. 65 லட்சம் மதிப் பிலான பொருட்களை கொள்ளை யடித்துள்ளனர். 17 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி யுள்ளனர்.

பெங்களூருவில் ஊரகப் பகுதி களில் தனியாக உள்ள தமிழர் களின் வீடுகளுக்குள் புகுந்து ஏராள மான பொருட்களை கொள்ளைய டித்துள்ளனர். சில இடங்களில் தனி நபர் விரோதத்தை இந்த வன்முறை சம்பவத்தின்போது பழிதீர்த்துள்ள னர். பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸா ரிடம் புகார் அளித்துள்ளனர்.

லாரி ஓட்டுநர்களிடம் கொள்ளை

பெங்களூரு, மண்டியா, மைசூரு, சித்ரதுர்கா, பெல்லாரி, ஹாசன் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட‌ லாரிகள் தாக்கப்பட்டன. லாரியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சரக்குகளை கன்னட அமைப்பினர் கொள்ளையடித்தனர்.

மண்டியாவை சேர்ந்த எம்.எல்.ஏ-வான கோனா ரெட்டியின் மகன் ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர், நாமக்கல்லை சேர்ந்த‌ லாரி ஓட்டுநர் முத்துவிடம் இருந்து செல் போனையும் ரூ. 23 ஆயிரத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக மண்டியா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பல்வேறு கொள்ளைகள், வன்முறைகளில் பாதிப்புகளுக்கு ஆளான தமிழர்களுக்கு கர்நாடக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, தமிழர்களின் துயரை போக்க வேண்டும் என தமிழ் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in