Last Updated : 16 Jun, 2017 04:01 PM

 

Published : 16 Jun 2017 04:01 PM
Last Updated : 16 Jun 2017 04:01 PM

வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு

வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் ஆகிறது. ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனை செய்யும்போது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் ஆதார் அடையாள எண்ணை குறிப்பிடாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள் அதிக எண்ணிக்கை யிலான பான் அட்டைகளை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்கு ஆதார் எண் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி மோசடியைத் தடுப்பதற்காக 2005-ம் ஆண்டு விதிப்படி பான் எண் மற்றும் படிவம் 60-ஐ தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தனி நபர், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.

அந்நியச் செலாவணி விதி மீறல் நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பு வங்கிக் கிளைகளுக்கு உள்ளது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனை, தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட வேண்டும் என வங்கிக் கிளைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்கு தொடங்குபவர்களிடம் ஆதார் எண் கேட்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விதம் ஆதார் எண் இல்லா தவர்கள் உரிய அடையாள சான்றை அளித்து தொடங்கலாம் என்றும் பிறகு ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்ததற்கான விவரத்தை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. ஆதார் அட்டை வந்த பிறகு அந்த எண்ணை வங்கிக் கிளைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் விவரத்தை தாக்கல் செய்ய 6 மாதம் கால அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற் குள் ஆதார் எண்ணுக்கு விண்ணப் பித்து தாக்கல் செய்யலாம்.

அந்நியச் செலாவணி பரிவர்த்த னையில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பு தொடங்கப்பட்டிருந்தால், அவை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண் மற்றும் பான் எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

உயர் மதிப்பிலான பரிவர்த்தனை செய்யும் தனி நபர், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் பான் எண் மற்றும் படிவம் 60-ஐ தாக்கல் செய்யும்போது கூடவே ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும்.

நிறுவனங்களின் வங்கிக் கணக்கு களுக்கு நிறுவன மேலாளரின் ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கை கையாளும் பணியாளரின் ஆதார் எண்ணை அங்கீகரிப்பதற்கு உரிய வழி வகைகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கி ரூ.50 ஆயிரத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனையைக் கட்டுப்படுத்தியுள் ளதன் மூலம் அந்நியச் செலாவணி பரிவர்த்தனையை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் கறுப்புப் பணத்தை யும் தடுக்க முடியும் என அரசு உறுதியாக நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x