

வளமான எதிர்காலத்திற்கு பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ஜார்கண்டில் நலத்திட்டங்களை துவக்கிவைத்துப் பேசிய நரேந்திர மோடி, "வளர்ச்சியில் குஜராத்தை மிஞ்சும் அளவுக்கு ஜார்கண்ட் மாநிலத்திற்கு வளங்கள் இருக்கிறது. ஆனால் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்காததாலேயே ஜார்கண்ட் இன்னும் பின் தங்கியிருக்கிறது.
மத்தியில் பாஜக தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்துள்ளது. இதன் காரணமாகவே, பல முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்திருக்கிறது. பெரும்பான்மை ஆட்சி இல்லாவிட்டால் கூட்டணிக் கட்சிகளால் நெருக்கடியை சந்தித்திருக்க வேண்டும். எனவே, பெரும்பான்மை ஆட்சியை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜார்கண்ட் மக்களே, நீங்கள் சவாலான தருணத்தை எதிர்கொண்டுள்ளீர்கள். விரைவில், மாநிலத்தை தேசத்தில் தலைநிமிரச் செய்யுங்கள். ஆட்சி அதிகாரத்தை மக்கள் கைகளில் கொடுக்க வேண்டும் என்பதையே அரசு விரும்புகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது இதற்கு ஒரு சான்று" என்று மோடி பேசினார்.