

2015-16-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி தேதி வரும் ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூலை 31-ம் தேதிக்குள் ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்தம் காரணமாக வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் காரணமாக இயல்பு நிலை திரும்பா ததால் அங்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிடர்ன் தாக்கல் செய்ய லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை செயலர் ஹாஷ்முக் அதியா இதுதொடர் பான ட்விட்டர் பதிவில், “வங்கி களின் இன்றைய (வெள்ளிக் கிழமை) வேலை நிறுத்தம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இடையூறுகளை மனதில் கொண்டு வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரையும், ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையும் ரிடர்ன் தாக்கல் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.