

பிளாஸ்டிக் அரிசி, முட்டையைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக நாடு முழுவதும் பிளாஸ்டிக் அரிசி, முட்டை, சர்க் கரை உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் செய்தி பரவி வருகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இது தொடர்பான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் நகரைச் சேர்ந்த இல்லத்தரசி லதா (45) அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து தேநீர் தயாரிப்பதற்காக கொதிக்கும் பாலில் சர்க்கரையை போட்டுள்ளார். அப்போது தேநீரில் இருந்து பிளாஸ்டிக் கருகும் வாசனை வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த லதா சர்க் கரையை கீழே கொட்டி ஆராய்ந்த போது, வெள்ளை மணிபோன்ற பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து லதா உள்ளிட்ட வாடிக்கை யாளர்கள் அந்த மளிகைக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஞ்சு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மளிகை கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சமரசம் செய்த அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சர்க்கரை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பெங்களூருவை சேர்ந்த சிவ குமார் தனக்கு பிளாஸ்டிக் சர்க் கரை கலப்படம் செய்த சர்க்கரையை விற்பனை செய்த கடையின் உரிமை யாளர் மோகன் மீது போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சர்க்கரை மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் பெங்க ளூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் ஒரே நேரத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை தொடர்பாக புகார் எழுந் துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பிளாஸ்டிக் சர்க்கரை எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்றும் எங்கு கலக்கப்படுகிறது என்றும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.