

உத்திர பிரதேசததின் முசாபர்நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்துவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரின் மெகமூத் நகர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த மாவியா(40), ஜாஸ்மின்(21), ஷக்கீலா(23) மற்றும் இரு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 10 வருடங்களாக அங்கு தங்கியிருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்.என். சிங் கூறி உள்ளார்.