

டெல்லியில் டெங்கு காய்ச்சலால் 5 பேரும் சிக்குன்குனியாவால் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒரு பேனா வாங்க கூட டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை.
அனைத்து அதிகாரங்களும் துணைநிலை ஆளுநர், பிரதமரிடம் மட்டுமே குவிந்துள்ளன. டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் குறித்து அவர்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது,
“நாடு முழுவதும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குறை கூறக் கூடாது. மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்”என்றார்.