

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அறிவிக்கப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தேசிய நுழைவுத்தேர்வு நடப் பாண்டே நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிடிவாதம் காட்டியது.
எனினும் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து ஓர் அவசர சட்டம் மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.
இதனிடையே, அவசர சட்டத்தை எதிர்த்து, ஆனந்த் ராய் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இம் மனு வரும் 7-ம் தேதி தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.