டெல்லியில் வரும் 16-ம் தேதி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

டெல்லியில் வரும் 16-ம் தேதி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
Updated on
1 min read

பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அனைத்து மாநில கவுன்சில் கூட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

கடந்த 1990 மே 28-ம் தேதி அனைத்து மாநில கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் 10-வது கூட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்றது. அதன்பிறகு கூட்டம் நடைபெறவில்லை.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாநில கவுன்சிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 16-ம் தேதி கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் நடத்தப்பட உள்ளது.

இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார். குறிப்பாக பள்ளிக் கல்வித் திட்டம், நேரடி மானியத் திட்டம், நல்லாட்சி, சமூக, பொருளாதார திட்டங்கள், ஆதார் அட்டை திட்டம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கூறும் ஆலோசனை கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

அனைத்து மாநில கவுன்சிலின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். மத்திய அமைச் சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வ ராஜ், அருண் ஜேட்லி, வெங் கய்ய நாயுடு, நிதின் கட்கரி, மனோ கர் பாரிக்கர் ஆகியோர் உறுப்பினர் களாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in