

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் தரிசனம் செய்யும் யாதவ குலத்தைச் சேர்ந்த வெங்கடராமய்யாவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை யாதவ குலத்தை சேர்ந்த சன்னதி யாதவர்கள் வம்சாவழியாக முதல் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 1996-ம் ஆண்டு ஆந்திர அரசு மிராசு சட்டத்தை ரத்து செய்தது. இதனால் திருப்பதி கோயிலில் வாரிசு அடிப்படை யில் பணியாற்றி வரும் அர்ச்சகர் கள், யாதவர்கள் தேவஸ்தான ஊழியர்களாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகின்ற னர். இதில் வம்சாவழியாக வரும் அர்ச்சகர்களுக்கு பதவிக் காலத்தை அரசு நீட்டித்தது.
இந்நிலையில் வம்சாவழியாக வரும் சன்னதி யாதவ குலத்தை சேர்ந்த எஸ். வெங்கடராமய்யா வின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் எங்கள் குலத்தோருக்கும் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என இவர்கள் போர்கொடி தூக்கினர். இந்நிலையில், வெங்கடராமய்யா வின் பதவிக் காலத்தையும் ஓராண்டு நீட்டிப்பதாக திருமலை, திருப்பதி தேவஸ்தானம் நேற்று மாலை அறிவித்தது.