

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குகள் சரணா லயம் அமைந்துள்ளது. இந்த சரணா லயத்தில் அரிய வகையான ஆசிய சிங்கங்கள் வசித்து வருகின்றன.
இங்கு தனது மனைவி ரீவா சோலங்கியுடன் ஜடேஜா சுற்றுலா சென்றுள்ளார். சரணாலயத்துக் குள் சிங்கங்களை பார்ப்பதற்காக வனத்துறையின் வாகனத்தில் சென்ற ஜடேஜா வாகனத்தில் இருந்து இறங்கி 12 அடி தூர பின் னணியில் சிங்கங்கள் நிற்கும் வகை யில் செல்பி எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது மனைவியுடன் சேர்ந்த நிலையிலும் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த படங்களில் இன்ஸ்டா கிராமில் வைரலாகி உள்ளது. கிர் காடுகளில் சிங்கங்கள் வசிக்கும் பகுதிகளில் வாகனத்தில் இருந்து இறங்கக்கூடாது என விதி இருக்கும்போது ஜடேஜா சிங்கங் களுடன் போட்டோ எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குஜராத் வனத்துறை உத்தரவிட்டுள் ளது. இதுகுறித்து தலைமை வன பாதுகாவலர் ஏ.பி.சிங் கூறும்போது, “கிர் தேசிய பூங்கா மற்றும் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதி. இங்கு பார்வையாளர்கள் வாகனத் தில் இருந்து இறங்க அனுமதி கிடையாது. காரில் இருந்து இறங்கி சட்ட விதிகளை ஜடேஜா மீறி உள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். விசாரணைக்கு பின்னர் அபராதம் விதிப்பது தீர்மானிக்கப்படும்” என்றார்.
கிர் காடுகளில் எடுத்துள்ள படங் களை இன்டாகிராமில் வெளியிட் டுள்ள ஜடேஜா படத்தின் கீழ் பகுதி யில் "குடும்ப படம், கிர் காடுகளின் சிறந்த நேரம்" என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளார்.
ஆசிய சிங்கங்கள் கடந்த 2008-ம் ஆண்டில் அழிவந்து வரும் இனங்களின் பட்டியலில் உள்ள தாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற் போது கிர்காடுகளில் 523 ஆசிய சிங்கங்கள் இருப்பதாக வனத் துறையினரின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 சிங்கக் குட்டிகள் கண்காணிப்பு
அண்மையில் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுவன், பெண், முதியவர் என 3 பேர் சிங்கம் தாக்கி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் 17 சிங்கங்கள் கூண்டில் அடைக்கப்பட்டன. இதில் குறிப்பிட்ட ஒரு சிங்கத்தின் சாணத்தில் அதிக அளவு மனித ரோமம் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த சிங்கம் தனி கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் 2 சிங்கக் குட்டிகளின் சாணத்தில் மனித ரோமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ரோமத்தின் அளவு மிகவும் சொற்பமாக இருந்ததால் மிச்சமாக கிடந்த மனித உடலை அவை தின்றிருக்கலாம் என கருதப்படுகிறது.எனவே அந்த சிங்கக் குட்டிகளை தனி கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக திரியவிட்டு கண்காணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.