பணம் வழங்கும் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கலாம்: தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு கட்சிகள் எதிர்ப்பு

பணம் வழங்கும் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கலாம்: தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு கட்சிகள் எதிர்ப்பு
Updated on
1 min read

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2016 மே மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது பணப் பட்டுவாடா புகார் காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட் டது. இதே விவகாரம் காரண மாக கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்து செய்யப் பட்டது.

பணப் பட்டுவாடா விவகாரங் களில் வாக்குப்பதிவை ரத்து செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத் துக்கு அதிகாரம் உள்ளது. வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.

எனவே பணப் பட்டுவாடா விவகாரத்தில் ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அந்த வேட்பாளர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தடை விதிக்க வேண்டும். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 12-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால் ஆணையத்தின் பரிந்துரைக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கும். எனவே இந்த பரிந்துரையை கைவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in