

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இளவரசியுடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா தற்போது வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
“பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா பெண்கள் சிறை பகுதியில் பி-2 அறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது கோடை நிலவுவதால் அந்த அறையில் எலி, கரப்பான் பூச்சி உள்ளிட்டவையும் நுழைந்து விடுகின்றன. எனவே தன்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர் பி- 4 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்''என சிறை வட்டாரம் தெரிவித்துள்ளது.