அமேதி, ரேபரேலியில் பிரியங்கா 13-ல் பிரச்சாரம்

அமேதி, ரேபரேலியில் பிரியங்கா 13-ல் பிரச்சாரம்
Updated on
1 min read

உ.பி.யில் முதல்கட்ட தேர்தலுக் காக காங்கிரஸ் சார்பில் வெளி யிடப்பட்ட நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் பிரியங்கா பெயரும் இருந்தது. ஆனால் முதல்கட்ட தேர்தலில் காங்கிரஸ் அல்லது கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதி யின் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரச்சாரம் செய்ய வில்லை.

இந்நிலையில் உ.பி.யில் தனது தாய் சோனியா காந்தியின் மக்களவை தொகுதியான ரேபரேலி, தம்பி ராகுல் காந்தியின் மக்களவை தொகுதியான அமேதி ஆகியவற்றில் பிரியங்கா வரும் திங்கள்கிழமை முதல் 5 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய விருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

உ.பி.யில் காங்கிரஸும் சமாஜ் வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அமேதி, உன்சாஹார், கவுரிகஞ்ச் ஆகிய 3 தொகுதிகளில் இரு கட்சி வேட் பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இதனிடையே சோனியா காந்தியும் தனது உ.பி. பயணத் திட்டத்தை இறுதி செய்துள்ளார். அவர் வரும் 20-ம் தேதி அவர் ரேபரேலியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக சோனியா இதுவரை உ.பி.யில் பிரச்சாரத்தை தொடங்க வில்லை.

ராகுல் காந்தி, வரும் 18-ம் தேதி ரேபரேலியிலும் 24-ம் தேதி அமேதியிலும் பிரச்சாரம் செய்கிறார். ரேபரேலியில் வரும் 23-ம் தேதியும் அமேதியில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in