Published : 17 Jan 2017 10:19 AM
Last Updated : 17 Jan 2017 10:19 AM

சட்டப் படிப்பு தேர்வு விடைத்தாள் திருத்துவதில் கடும் கெடுபிடி: ஆக்ரா பல்கலை.யில் 90% பேர் தோல்வி - வெறும் வெள்ளைத்தாள் இணைத்தது அம்பலம்

ஆக்ராவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சட்டப் படிப்பு தேர்வு களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மாணவர்களை தேர்ச்சி அடைய வைப்பதற்காக இடை தரகர்கள் பலர் இயங்குவதாகவும் அவர்கள் விடைத்தாள்களை நிரப் பாமல் அப்படியே வெள்ளையாக அளிக்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்திவிட்டு, அதனை திருத்தும்போது முறைகேடுகள் செய்து மதிப்பெண்களை வழங் கும் நடவடிக்கையில் ஈடுபடுவ தாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்ற அர்விந்த் தீட்சித், இத்தகைய முறை கேடுகளை தடுக்க கடும் நட வடிக்கைகளை மேற்கொண்டார். விடைதாள்களை திருத்தி மதிப்பீடு செய்யும் பணி களை ஓய்வு பெற்ற ஆசிரியர் களின் மேற்பார்வையில் மேற் கொண்டார். இதன் காரணமாக தேர்வு சமயத்தில் தரகர்களை நம்பி வெறும் வெள்ளைத் தாள் களை இணைத்து விட்டு வந்த பல மாணவர்கள் தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ளனர்.

அண்மையில் 1,700 மாணவர் களின் விடைத்தாள்கள் திருத்தப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 90 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவருமே வெறும் வெள்ளைத் தாள்களையும், சம்பந்தமில்லாத பதில்களையும் எழுதியவர்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 15,000 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் 20-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களும், இடைத்தரகர் களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x