

தேர்தல் ஆணைய விதிப்படி சிபாரிசு கடிதங்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்துள்ளது.
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள், தேவஸ்தான அறங்காவலர்கள் போன்றவர்களிடம் இருந்து சிபாரிசு கடிதங்களுடன் நாள்தோறும் சுமார் 2,500 பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். இவர்களுக்கு சுவாமி தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துவருகிறது.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணைய விதிப்படி சிபாரிசு கடிதங்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதால் சிபாரிசு கடிதங் களும் கணிசமாக குறைந்து விட்டன. தினமும் சுமார் 1000 கடிதங்கள் மட்டுமே வருகின்றன என்கின்றனர் அதிகாரிகள்.