சமூக அமைதிக்காக கருணை, சகிப்புடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும்: பிரணாப் புத்தாண்டு வாழ்த்து

சமூக அமைதிக்காக கருணை, சகிப்புடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும்: பிரணாப் புத்தாண்டு வாழ்த்து
Updated on
1 min read

இன்று ஆங்கில புத்தாண்டு கொண் டாடுவதை முன்னிட்டு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் நிலவ வேண்டும். அதற்கு மக்கள் மனதில் கருணை, சகிப்புத்தன்மையை கொண்டு நடந்து கொள்ள வேண்டும். இந்த கருத்துகளை கொண்டு இந்தபுத்தாண்டை மக்கள் புதிதாக தொடங்க வேண்டும்.

இந்த புத்தாண்டில் ஒவ்வொரு வரும் புதிய தீர்மானங்களை மேற் கொண்டு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நாகரீக உலகில் அதன் மதிப்புகளை நாம் பின்பற்றுவோம். இந்தியா வில் உள்ள பல்வேறு வேற்றுமை களையும் இணைப்பது அதுதான். அதன் மூலம் இந்தியாவையும், உலகையும் மேம்படுத்துவோம்.

இந்த புத்தாண்டில் நம் நாட்டை சுத்தமாகவும், பசுமையாகவும் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுப்போம். மனிதர்களுக்கும் இயற் கைக்கும் உள்ள உறவை மேம் படுத்தி, சுற்றுச்சூழலை மாசுப்படா மல் பாதுகாப்போம். இவ்வாறு பிரணாப் முகர்ஜி வாழ்த்துச் செய்தி யில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in