

ஜம்மு-காஷ்மீர்ன் ரெசாய் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ராணுவ தாக்குதலில் தகர்க்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ரெசாய் மாவட்டப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவலை அடுத்து அங்கு ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கு பதுங்கிடம் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் தகர்க்கப்பட்டது. பதுங்கிடத்தில் ரேடியோ கருவிகள், சால்வைகள், ஏ.கே. 56 ரக துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.