

ஆந்திர மாநிலத்தில் இனி பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வு களும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என மாநில கல்வி அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஹைதராபாத்தில் நேற்று கூறியதாவது:
ஆந்திராவில் உயர் கல்விக் கான நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூல மாகவே நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம், ஐஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்விகளுக்கான அனைத்து நுழைவுத் தேர்வு களும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் ஆள் மாறாட்டம், பார்த்து எழுதுவது போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த திட்டம் விரைவில் பரிசோதிக்கப் பட்டு, பின்னர் முழுமை யாக அமல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி மற்றும் கல்லூரி, பள்ளி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்துவது பற்றி ஆலோ சிக்கப்படும். இதற்காகக் குழு அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் வருங்காலங் களில் ஆந்திராவில் காகிதங் களே உபயோகிக்காமல் தேர்வு கள் நடத்தப்பட உள்ளன.
அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் விஜயவாடாவில் டிஜிட்டல் பள்ளி அறை திட்டம் அமல்படுத்தப்படும். இதனால் மாணவர்களுக்கு புத்தகச் சுமை குறையும் என்றார்.