

அருணாச்சல் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் காந்த் சர்மா நேற்று கூறியதாவது:
அருணாச்சல் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டதால்தான் மாநிலத்தில் அரசியல் சிக்கல் ஏற்பட்டது. காங் கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தோம்.
உள்கட்சி மோதலுக்கு பாஜக.வை காங்கிரஸ் குறை சொல்லக்கூடாது. எனவேதான் புதிய அரசுக்கு வெளியில் இருந்து பாஜக ஆதரவு தந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் பாஜக.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அதன்படி செயல்படுவோம். ஜனநாயகத்தை பற்றி ராகுல் காந்தி இப்போது பேசுகிறார். 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது. அந்த வரலாற்றை அவர் படிக்க வேண்டும். இவ்வாறு காந்த் சர்மா கூறினார்.