Last Updated : 03 Jun, 2016 08:37 AM

 

Published : 03 Jun 2016 08:37 AM
Last Updated : 03 Jun 2016 08:37 AM

டெல்லியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்: 70 சதவீதம் பழுதடைந்துள்ளதாக புகார்

டெல்லியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் 70 சதவீதம் பழுதடைந்துள்ளதாக சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லி, பல ஆண்டுகளாக தீவிரவாத அமைப்புகளால் குறிவைக்கப் படும் நகராக உள்ளது. இதன் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந் துள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டு டெல்லி காவல்துறை சார்பில் நகரின் முக்கிய பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட 44,064 கேமராக் களில் பாதியளவு செயல்படாத நிலையில் உள்ளன. இந்த கேமராக்களை நிர்வகித்து வரும் எலக்ரானிக்ஸ் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் (ஈசிஐஎல்) நிறுவனத்துக்கும் டெல்லி அரசுக்கும் இடையிலான பிரச்சினையே இதற்கு காரண மாகக் கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, சாலை பழுது பார்க்கும் பணி காரணமாக மேலும் 20 சதவீத கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளன. இந்த தகவல், டெல்லி யின் பாதுகாப்பு குறித்து அதன் தலைமை ஆணையர் அலோக் குமார் வர்மா சமீபத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியாகி உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “70 சதவீத கண்காணிப்பு கேமராக்கள் செயல் படாத தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆணையர், இந்தப் பிரச்சினையை ஈசிஐஎல் நிறுவனத் துடன் உடனடியாக பேசித் தீர்க்க உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அமைத்த கண்காணிப்பு கேமராக் கள் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். இதனால் ஏற்பட்டிருந்த பாதுகாப்பு குறை பாடு, நகரின் பொது இடங்களில் தனியார் அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களால் தீர்க்கப்பட்டு வரு கிறது. இவர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.

டெல்லியில் முக்கிய இடங் களாக விளங்கும் 56 மார்க் கெட்டுகள், நீதிமன்றங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் டெல்லி காவல்துறையால் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட் டுள்ளன. தவிர காவல்துறை யின் ஒத்துழைப்புடன் தனியார் செலவில் சுமார் 1.6 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் சாந்தினி சவுக், கன்னாட் பிளேஸ், சவுத் எக்ஸ், தெற்கு டெல்லி மார்க்கெட்டுகள் ஆகியவற்றில் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் கேமராக்கள் அமைக்கப் பட்டு, செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் கேமராக்களுக்காக சுமார் 50 கண்காணிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதுபோல், தனியார் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடன் டெல்லி காவல் துறையின் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. எனினும், டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டு, பழுதடைந் துள்ள 70 சதவீத கேமராக்களும் செயல்படத் தொடங்கினால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x