கர்நாடகாவில் விற்பனை வரி அதிகாரி வீட்டில் 7000 சேலைகள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கின

கர்நாடகாவில் விற்பனை வரி அதிகாரி வீட்டில் 7000 சேலைகள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கின
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள விஷ்வேஸ்வர் நகரைச் சேர்ந்தவர் கரியப்பா கர்னல். இவர் மாநில அரசின் விற்பனை வரி உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு இருந்த 7000 சேலைகள் சிக்கின.

விலை உயர்ந்த பட்டு, டிசைனர் வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகளும் இதில் இருந்தன. 3 அதிகாரிகள் இந்த சேலைகளை 6 மணி நேரம் கணக்கிட்டு மதிப்பீடு செய்தனர். இந்த சேலைகளின் மதிப்பு ரூ.1.5 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். இதே போல கரியப்பாவின் வீட்டில் இருந்து ரூ.7.2 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பல்வேறு சொத்து பத்திரங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக கரியப்பாவி டம் அதிகாரிகள் விசாரித்தபோது, தான் சேலை வியாபாரம் செய்வ தற்காக 7000 சேலைகளை வாங்கியதாக அவர் தெரிவித் துள்ளார்.

ஆனால், “விற்பனை வரி செலுத்தாத துணிக் கடைகளில் இருந்து சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரியப்பா ஆயிரக்கணக்கான சேலைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக் கும் பரிசளித்ததும் கண்டுபிடிக்கப் பட்டது” என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in