

அருணாச்சல பிரதேச மாநிலத் தில் முதல்வர் நபம் துகி தலை மையிலான அரசே நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை யடுத்து டெல்லியில் இருந்தபடி அம்மாநில முதல்வராக நபம் துகி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமைக்குள் (இன்று) சட்டப்பேரவையில் நபம் துகி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் ததகத்த ராய் உத்தரவிட்டார். அத்துடன், ‘நம்பிக்கை ஓட்டெடுப்பு வீடியோ வில் பதிவு செய்யப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று ஆளுநரை சந்தித்த முதல்வர் நபம் துகி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் எனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய முடிவை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்’’ என்றார்.
இந்நிலையில் ஏற்கெனவே உத்தரவிட்டபடி சனிக்கிழமைக் குள் பெரும்பான்மையை நிரூ பிக்க வேண்டும் என ஆளுநர் ததகத்த ராய் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் நபம் துகி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.