

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது. எனவே வருங் காலங்களில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சமாஜ்வாதி தலைவரும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எப்போது கோளாறு ஏற்பட்டது? எப்போது அதன் மென்பொருள் பழுதடைந் தது என்பது யாருக்கும் தெரி யாது. இயந்திரங்கள் மீது ஒரு கட்டத்துக்கு மேல் நம்பிக்கை வைக்க முடியாது. அதுபோலவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வாக்குச் சீட்டு முறையிலான தேர்தலில் எங்களுக்கு நூறு சதவீத நம்பிக்கை இருக்கிறது. எதிர் காலத்தில் நடத்தப்படும் தேர்தல் களில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நல்லதோ, கெட்டதோ அது எங்களுக்கு தெரியாது. ஆனால் இனியும் அந்த இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. உ.பி. தேர்தலில் மதம் மற்றும் சாதி அடிப்படையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அகிலேஷ் கூறினார்.