

மக்களவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வியாழக்கிழமை வெளியிட்டார். பணக்காரர்கள், தொழில் நிறுவன லாபத்தின் மீது வரி, வரி ஏய்ப்பை தடுப்பது, கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றின் மூலம் அரசின் நிதியாதாரத்தை பெருக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரகாஷ் காரத் பேசுகையில், “மாற்று கொள்கைகளை அளிக்க கூடிய மாற்று அணி நாட்டுக்கு தேவைப்படுகிறது” என்றார்.