

ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக் கோரி ஆளுநர் நரசிம்மனிடம் தெலங்கானா தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் மனு கொடுத்தனர்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உதயமான நிலையில் இரு மாநிலங்களுக்கிடையேயும் மின் விநியோகம், நதிநீர் பிரச்சினை உருவாகி உள்ளது.
இது குறித்து இரு மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் தனித்தனியே ஆளுநர் நரசிம்மனை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மின்சார விநியோகம், நதிநீர் பிரச்சினை தீவிரமாகாமல் இருக்க, இரு மாநில முதல்வர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முன் வர வேண்டும் என இரு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் நேற்று வியாழக்கிழமை அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக் கோரி ஆளுநர் நரசிம்மனிடம் தெலங்கானா தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் மனு கொடுத்தனர்.