

ஆம் ஆத்மி கட்சியைப் பிளவு படுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா தலைவர்கள் 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி வீட்டின் முன் திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அருண் ஜெட்லி மீது கூறியுள்ள குற்றச்சாட்டைக் கண்டித்து, பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே இடத்தில் இரண்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. பின்னர் போலீசார் குறுக்கிட்டு இரு தரப்பினருக்கு மத்தியில் தடுப்பு வேலிகளை வைத்தனர். இதனால் பதற்றம் சற்று தணிந்தது.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஓட்டுக்காக இத்தகைய அரசியலில் ஈடுபடுகின்றனர் என பாஜக தலைவர் ஹரிஷ் குராணா தெரிவித்தார்.
ஆம் ஆத்மி புகார் குறித்து அருண் ஜெட்லி தனது ட்விட்டரில்: "பொய் உரைத்தலை அடிப்படை உரிமையாக்கியுள்ளது ஆம் ஆத்மியின் மாற்று அரசியல்" என தெரிவித்திருந்தார்.