

புத்தாண்டு தினத்தையொட்டி ஹைதராபாதில் நேற்று முன்தினம் இரவு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொள்ள பிரபல பாகிஸ்தான் பாடகர் ரஹத் ஃபதே அலிகான் அபுதாபியிலிருந்து நேரடி விமானம் மூலம் ஹைதரா பாத் வந்தார். விமான நிலையத்தில் இவரை சோதனையிட்ட அதிகாரிகள், டெல்லி அல்லது மும்பை விமானை நிலையம் வழியாகத்தான் அலிகான் இந்தியா வரவேண்டும் என்று நிபந்தனை உள்ளதாக கூறி அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து அலிகான் விமானம் மூலம் டெல்லி சென்று பிறகு அங்கிருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்தார்.