சுற்றுலாவா, தீவிரவாதமா? - காஷ்மீர் இளைஞர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

சுற்றுலாவா, தீவிரவாதமா? -  காஷ்மீர் இளைஞர்களிடம் பிரதமர் மோடி கேள்வி
Updated on
1 min read

காஷ்மீர் இளைஞர்கள் முன்பு 2 பாதைகள் உள்ளன. ஒன்று சுற்றுலா, மற்றொன்று தீவிரவாதம். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது இளைஞர்களின் கையில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:

கல்லின் வலிமை குறித்து காஷ்மீர் இளைஞர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். தவறான வழிநடத்துதலால் சில இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் சில இளைஞர்கள் காஷ்மீரின் எதிர் காலத்துக்காக கற்களை வெட்டி வருகின்றனர்.

பணத்தினால் மட்டும் செனானி-நஷ்ரி சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. காஷ்மீர் இளைஞர்களின் வியர்வை, உழைப்பால் இந்த சுரங்கப்பாதை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்- ஜம்மு இடையே பயண தொலைவு குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

காஷ்மீர் இளைஞர்கள் முன்பு 2 பாதைகள் உள்ளன. ஒன்று சுற்றுலா, மற்றொன்று தீவிரவாதம். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது இளைஞர்களின் கையில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக ரத்தம் சிந்தப்படுகிறது. பல தாய் மார்கள் தங்கள் மகன்களைப் பறிகொடுத்துள்ளனர். அதற்குப் பதிலாக சுற்றுலாவை தேர்ந் தெடுங்கள். நீங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.

பாகிஸ்தானால் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடிய வில்லை. இந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு ஓர் அழைப்பு விடுக் கிறேன். இந்திய அரசின் காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களைப் பாருங்கள். உங்கள் எதிர்காலம் என்ன? அதை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in