Last Updated : 13 Sep, 2016 07:44 AM

 

Published : 13 Sep 2016 07:44 AM
Last Updated : 13 Sep 2016 07:44 AM

காவிரி மேற்பார்வை கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை

டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லைஎன தக‌வல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் அதன் தலைவர் சசிசேகர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

8 மணி நேரம் விவாதம்

சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் ராமமோகனராவ், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பபிரிவு ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரும், கர்நாடகா சார்பில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவ், அரசு தலைமை வக்கீல் மதுசூதன் நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மீண்டும் 19ம் தேதி

அப்போது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி நதி நீர் பங்கீடு, கர்நாடக அணைகளின் நீர் மட்ட நிலை, உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு கர்நாடகா ஆட்சேபம் தெரிவித்ததால் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பாகவும் முடிவு கள் எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 19-ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படலாம் என மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x